அப்பல்லோவுக்கு செப்.23ம் தேதி புரோகிதர் ஏன் வந்தார்..? - வைரல் அதிர்ச்சி வீடியோ...!

உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சந்திக்க ஆளுநர், ராகுல் காந்தி, அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. சென்றவர்கள் சசிகலாவையும், அதிமுக அமைச்சர்களை மட்டுமே சந்தித்து விட்டு ஜெ.வின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு திரும்பினர்.

 
அதன்பின் கடந்த டிசம்பர் 5ம் தேதி அவர் மாரடைப்பில் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 6ம் தேதி அவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. 

அவரின் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும், அவரின் தோழியும், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா ஜெ.வின் மரணம் குறித்த பல உண்மைகளை மறைத்துவிட்டதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் அது குறித்து சசிகலா வாய் திறந்து எதுவும் கூறவில்லை.
 
இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவுடன் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.  டிசம்பர் 6ம் தேதி ஜெ. அடக்கம் செய்யப்படுவதற்கு முன், அவருக்கு ஈமச்சடங்கு செய்த ஐய்யங்கார், கடந்த செப்டர் 23ம் தேதி, அதாவது ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மற்றவர்களை உள்ளே விட மறுக்கும் போலீசார், அவரை பார்த்தவுடன்  ‘பின் வழியே வாருங்கள்’ என்று சைகை காட்டுகிறார். அவரும் அப்படியே செல்கிறார்.
 

பொதுவாக ஈமச்சடங்கு செய்வும் புரோகிதர்களை, சுப காரியங்களுக்கு அழைக்க மாட்டார்கள் என்ற கருத்து இருக்கிறது. எனவே, இந்த புரோகிதருக்கு அன்று அப்பல்லோவில் என்ன வேலை? என அந்த வாட்ஸ் அப் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 
எனவே ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதியே இறந்துவிட்டார். அதை சசிகலா மறைத்துள்ளது அம்பலமாகியுள்ளது எனவும், இந்த வீடியோ உச்ச நீதிமன்றத்தில் ஆதரமாக கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
வைரலாக பரவி வரும் இந்த ஆதார வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post