பூமியில் வேற்றுக்கிரகவாசிகளின் உடற் பாகங்கள்..... புதிய ஆதாரம் - அதிர்ச்சி வீடியோ...!

வேற்றுக்கிரக வாசிகளின் உடல் பாகங்கள் என நம்பப்படும் கைவிரல் மற்றும் மண்டை ஓடு உள்ளிட்ட பகுதிகள் பேரு நாட்டின் குஸ்கோ நகரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருவின் மச்சுபிச்சு மலையை அண்மித்தப் பகுதிகளான குஸ்கோ நகரத்தில்  அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்ட குழுவே குறித்த உடற்பாகங்களை கண்டுபிடித்துள்ளது.அமானுட ஆய்வியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த குறித்த குழுவின் உறுப்பினர்கள் வேற்று கிரகவாசிகளுடையதாக நம்பப்படும் மண்டை ஓடு மற்றும் சுமார் 8 அங்குல நீளமுடைய கை எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த உடற்பாகங்கள் குஸ்கோ நகரத்திற்கருகாமையில் மிகவும் ஆழமான பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கபட்ட பாகங்கள் இதுவரை எந்தவொரு ஆய்வு மையத்திலும் உறுதிபடுத்தப்படாத நிலையில் தற்போது அமெரிக்க ஆய்வு மையத்திற்கு அனுப்பி மரபியல் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு குறித்த குழு முடிவு செய்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post