குழந்தைக்கு பாலூட்டிய தாயை மேலாடை அணிய கூறிய நபர்! பதிலடி கொடுத்த பெண்மணி - வீடியோ!

ஏவரி லேனே, மிலிட்டரி போஸ்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி. இவர் எச்.அன்ட்.ஆர் பிளாக் பகுதியில் தனது இரண்டு மாத குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்த போது, ஏவரி லேனேவை, மேலுடலை டவல் கொண்டு மறைக்க சொல்லி வற்புறுத்தி கூறியுள்ளார்.

ஆனால், தாய் பாலூட்டுவது ஆபாசமோ, அபத்தமோ இல்லை. அதை தவறான எண்ணம் கொண்டு பார்ப்பவர் கண்களில் தான் ஆபாசம் இருக்கிறது, அபத்தம் என்று கருதிய ஏவரி லேனே, அவரது மேலாளருக்கு டவல் கொடுத்து, உங்கள் முகத்தை மூடிக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றுள்ளார்.

இடத்தை காலி செய்!
இரண்டு மாத குழந்தைக்கு பாலூட்டிய ஏவரி லேனேவை அவரது மேலாளர், டவல் கொண்டு மேலுடலை மூடு, இல்லையேல், இடத்தை காலி செய் என கூறியுள்ளார்.


கோபம் அடைந்த பெண்மணி!
இந்த வார்த்தைகளில் கோபம் அடைந்த ஏவரி லேனே, உடனே மிலிட்டரி போலீஸை வரவழைத்தார். உடனே அங்கு, மிலிட்டரி போலீஸும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

போலீஸ் அசத்தல்!
ஏவரி லேனேவின் அழைப்பை கேட்டு வந்த மிலிட்டரி போலீஸ். பாலூட்டுவது தவறான விசயம் அல்ல. மேலும், இதற்காக ஏவரி லேனேவை வேலையை விட்டு வெளியேற சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என மேலாளரிடம் கூறி சென்றனர்.

இது சரியா?
உனக்கு பசிக்கும் போது தலையில் டவலை போர்த்திக் கொண்டு உண்பாயா? பிறகு எப்படி ஒரு இரண்டு மாத குழந்தை டவல் போர்த்தியபடி பால் நிம்மதியாக பருக முடியும் என ஏவரி லேனே தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சட்டம் தெரிந்துக் கொள்!
மேலும், ஜியார்ஜியாவின் பாலூட்டும் சட்டம் தெரிந்துக் கொண்டு நடந்துக் கொள்ளுங்கள் என்றும் ஏவரி லேனே தெரிவித்துள்ளார். இன்னும் இந்த சமூகம் பெண்களின் மார்பை ஒரு இச்சை கருவியாக மட்டுமே காண்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஏவரி லேனே கூறியவையும், அவர் செய்ததும் நூறு சதவிதம் சரியே.

முகநூல் பதிவு!
ஏவரி லேனே இட்டிருந்த முகநூல் பதிவு.

காணொளிப்பதிவு!
இந்த சம்பவத்திற்கு பிறகு ஏவரி லேனே பதிவு செய்திருந்த யூடியூப் காணொளிப்பதிவு!
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post