காதலை எப்படி எல்லாம் பெண்கள் மறைக்கிறார்கள் தெரியுமா?

நமது வாழ்க்கையில் மிகவும் அழகான அனுபவம் என்னவென்று கேட்டால் பலர் தங்களது கல்லூரி பருவத்தை குறிப்பிடுவர். இந்த பருவம் ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் பல த்ரில் ஆன அனுபவங்களை கொடுத்திருக்கும்.

மேலும் சில பெற்றோர்கள் கண்டிபானவர்களாக இருந்தால், கல்லூரி பருவத்தில் செய்யும் சேட்டைகளை பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரகசியமாக செய்வார்கள்.

முதலில் பெற்றோர்களுக்கு 'காதல்' 'பாய் பிரண்ட்ஸ்' போன்ற வார்த்தைகளே பிடிக்காது. அவர்களுக்கு படிப்பு, மார்க், கோல்ட் என்ற வார்த்தைகள் மட்டுமே பிடித்த வார்த்தைகளாக இருக்கும். ஆனாலும் இன்று வரை கிளாஸை கட்டடித்துவிட்டு படத்திற்கு செல்வது கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டாக உள்ளது.

இதில் கல்லூரி பெண்கள் தங்களது பாய் பிரண்டை பெற்றோர்களிடமிருந்து எப்படி மறைக்கிறார்கள் என்பது பற்றி காண்போம்.

இது மிகவும் பிரபலமான தப்பிக்கும் காரணம் ஆகும். கல்லூரி மற்றும் கேண்டினில் தனது பாய் பிரண்ட் உடன் நேரத்தை செலவிட்டு விட்டு வீட்டிற்கு லேட்டாக வந்தால் அம்மாவிடம் என்ன காரணம் சொல்வது? எளிது. எக்ஸ்ட்ரா கிளாஸ் இருந்தது.

தனது காதலனுடன் வெளி ஊர்களுக்கு செல்வது என்றால், பெண்கள் பொதுவாக கல்லூரி சுற்றுலா அல்லது பிரண்ட்ஸ் டூர் என்று சொல்லி பெற்றோர்களை சரிகட்டிவிடுகின்றனர்.

க்ரூப் ஆக உட்கார்ந்து படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு சில பெண்கள் தங்களது காதலனுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.


பெண்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை என்றால், தனது தோழியின் பாட்டி இறந்துவிட்டார் அங்கே போய்ட்டு வரேன் என்று பெற்றோர்களிடம் சொல்லி சமாளித்துவிடுவார்களாம்.

தனது காதலை வீட்டில் மறைக்க பெண்கள் தனது காதலனின் போன் நம்பரை பிரியா என்று போட்டு சேவ் செய்து வைத்துவிடுகிறார்களாம். இதனால் வீட்டில் இருப்பவர்கள் போனை பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.

எல்லா காரணங்களையும் சொல்லி முடித்துவிட்டால், விடுமுறை நாட்களில் தங்களது காதலனை பார்க்க பெண்கள் புரோஜெக்ட் வோர்க் இருக்கிறது என பெற்றோர்களை சமாளித்துவிடுகிறார்களாம்.

ஒருவேளை கல்லூரிகளை கட் அடித்துவிட்டோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதோ தனது தந்தையிடம் மாட்டிக்கொண்டால், நாங்கள் வெறும் பிரண்ட்ஸ் தான் அப்பா..! என்று சொல்லி விடுகிறார்களாம்..

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post