கண் புருவங்களை தடிமனாக வளர வேண்டுமா..? இதோ அருமையான 5 டிப்ஸ்!

நம் உடம்பில் அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக முகம் இருக்க, அந்த முகத்தில் ஒரு முக்கியமான இடத்தை கண் புருவங்கள் பிடிக்கிறது.

வாய்மொழியற்ற உணர்வினை திறம்படகொண்டு செயல்பட கண்புருவங்கள் அனைவருக்கும் உதவுகிறது.
கண்புருவங்களின் முக்கிய அம்சமாக சந்தோசத்தின் வெளிப்பாடும், கோபங்களின் வெளிப்பாடும், ஆச்சரியத்தின் வெளிப்பாடும் அமைந்து நம்மை ஆரவாரத்தில் தள்ளுகிறது.

இருப்பினும், தங்களுடைய கண்புருவங்கள் இயற்கையிலே தடிமனாக காணப்பட வேண்டுமென நினைப்பது பல பெண்களின் ஆசையாக இருப்பதனால், பேசியல் (முக அழகு) என்பதற்கு அவர்கள் முக்கிய துவத்தினை தந்து, பார்ப்பதற்கு அழகாகவும், இளமையாகவும் தெரிய வேண்டுமெனவும் விரும்புகின்றனர்.

அதனால், அவ்வாறான கண் புருவங்களை (தடிமனாக) நீங்கள் பெற உதவும் மூலப்பொருட்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.


ஆமணக்கு எண்ணெய்:
இந்த எண்ணெய்க்கு., நம்முடைய கண் புருவங்களை தடிமனாக வைத்துகொள்ளும் சக்தி இருக்கிறது. அது உங்களுடைய புருவ முடிகளை வளர செய்து, அத்துடன் முடி இழப்பை தவிர்த்து தடிமனாகவும், வலிமையாகவும் வைத்துகொள்ளவும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:
ஆர்கானிக்,
குளிர்ந்த அழுத்தம் கொண்ட ஆமணக்கு எண்ணெய்

செய்முறை:
1.உங்கள் விரல்களை கொண்டு...சில துளி ஆமணக்கு எண்ணெய்யால் புருவங்களில் தடவிகொள்ளுங்கள்.
 2.அதன் பிறகு முப்பது நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான டவலை கொண்டு நீக்க வேண்டும்.
3.இந்த முறையை தொடர்ந்து 8 வாரங்கள் செய்து வர, நல்லதோர் பயனை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள்.

கற்றாழை :
கற்றாழையில் ‘அலோனின்' என்னும் கலவை இருக்க, அது உங்கள் முடியினை மேம்படுத்த பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:
 கற்றாழை - 1 (நறுக்கப்பட்ட தூய்மையானது)
செய்முறை:
1.அந்த இலையை கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதன் சதைப்பகுதியை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும்.
2.அந்த ஜெல் போன்ற திரவத்தை, உங்கள் கண் புருவங்களில் பூசி, மசாஜ் செய்துகொள்ள வேண்டும். ஆம், அது முழுவதுமாக புருவத்தில் உறியும் (Absorb) வரை வைத்திருக்க வேண்டும்.
3.முப்பது நிமிடங்களுக்கு பிறகு, அதனை எடுக்க வேண்டும். இதனை காலைப்பொழுதில் தொடர்ந்து செய்துவரவேண்டும். அதேபோல், மீதமிருக்கும் ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துகொண்டு அடுத்து நாள் பயன்படுத்த வேண்டும்.

வைட்டமின் E:
வைட்டமின் E நிறைந்த மற்றுமொரு எண்ணெய், நம் பலவீனமான முடியினை பலப்படுத்தி வளர்ச்சியடைய உதவுகிறது. இதில் டோக்ட்ரினொல், ஆக்ஸிஜனேற்ற பண்பு, ஆகியவை இருக்க...அது நம் முடி வளர தடையாக இருப்பதனை நீக்கவும் நம்முடைய அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
வைட்டமின் E மாத்திரை - 1

செய்முறை:
1.அந்த வைட்டமின் E மாத்திரையை நறுக்கிகொண்டு, அந்த எண்ணெய்யை உங்கள் கண் புருவங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டியது அவசியமாகும்.
2.இரவு பொழுதில் வைத்திருந்து, தினமும் இதே முறையினை இரவு பொழுதில் செய்து வரவும்

முழு பால்:
 முடி வளர்வதற்கு முக்கிய காரணியாக பால் சிறந்து விளங்குகிறது. இந்த பாலில் இருக்கும் அதிகளவிலான வைட்டமின்கள், கனிமங்கள் (மினரல்), ஊட்ட சத்துகள் ஆகியவற்றிற்கு இத்தகைய பண்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:
முழு பால் - ¼ கப்
காட்டன் பஞ்சு

செய்முறை:
1.காட்டன் பஞ்சினை பாலில் ஊற வைக்க வேண்டும். அதனை கொண்டு உங்கள் புருவத்தை மசாஜ் செய்ய வேண்டும்.

2.பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரினை கொண்டு கழுவ வேண்டும்.
3.தினமும் இதனை செய்துவர, நல்லதோர் பயனை நமக்கு அது அளிக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் எழுமிச்சை (உரித்த ஒன்று)


மிக்ஸ்:
அடைக்கப்பட்ட துளைகளை போக்க உதவும் எழுமிச்சை, உங்கள் முடியில் இருக்கும் கருமுட்டையின் சுழற்சியினை மேம்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெய், ஊட்ட சத்துக்களை உங்களுக்கு தர, அது உங்கள் முடியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

தேவையான பொருட்கள்:
எழுமிச்சை - 1
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
காட்டன் பஞ்சு - 1
செய்முறை:
1.எழுமிச்சையை உரித்து நறுக்கிகொள்ள வேண்டும்

2.ஒரு க்ளாஸ் பாட்டிலில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றிகொள்ள வேண்டும். அத்துடன், உரிக்கப்பட்ட., நறுக்கப்பட்ட எழுமிச்சையை சேர்த்துகொள்ள வேண்டும்.

3.அதனை மூடி, குளிர்ச்சி மற்றும் இருள் சூழ்ந்த இடத்தில் பதினான்கு நாட்கள் வைக்க வேண்டும்.

4.அந்த கலவையை தினமும் நாம் பயன்படுத்திவர, சில நாள்களிலே உங்களிடம் வித்தியாசத்தை காண்பீர்கள். இந்த வழிமுறைகளை நீங்கள் செய்கின்றபோதிலும்... பொறுமை என்பது உங்களுக்கு அதிகம் வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இந்த வழிமுறைகள் அனைத்தும்...இயற்கையாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இந்த வழிமுறைகளை தவிர்த்து, டையட் முறையை பின்பற்றி...அதிகளவில் வைட்டமின்கள், கனிமங்கள், பிற அத்தியவாசிய ஊட்டசத்துக்களை சேர்த்துகொள்வதும் நல்லதாகும். உங்கள் உடம்பில் இருக்கும் நஞ்சினை வெளியேற்ற நீரினை அதிகம் பருகுவது நல்லதாகும். அத்துடன், உங்கள் முடியின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றி தீஞ்சுவை கொண்ட தடித்த மற்றும் கருகரு கூந்தலை குறைவான நேரத்தில் கொண்டும் நீங்கள் மகிழலாம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post