எந்த வகை சருமத்தினர் எலுமிச்சை பழ ஃபேஸ் மாஸ்க்குகள் பயன்படுத்தலாம் தெரியுமா..?

அழகு என்பது எல்லாருக்குமானது. நிறைய செலவழித்தால்தான் அழகாக முடியும் என்றெல்லாம் கிடையாது.

வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே நீங்கள் அழகாகலாம்.

நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு விஷயம். உங்களது நேரத்தை செலவிட வேண்டும் அவ்வளவே.

எல்லாருக்கும் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை பழத்தைக்கொண்டு செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்குகள் பற்றி இங்கே காணலாம்.

மாஸ்க் :
முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளி இருப்பவர்கள் இந்த பேஸ்மாஸ்க் பயன்படுத்துங்கள்.

ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையானவை

 முட்டை -1
எலுமிச்சை சாறு - மூன்று டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சிறிதளவு
வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுக்கவும். அதில் லெமன் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

சென்சிட்டிவ் ஸ்கின் :
கெமிக்கல் ப்ராடெக்ட்டுகள் எதுவும் உங்கள் சருமத்திற்கு சேராத அளவிற்கு உங்கள் ஸ்கின் சென்சிட்டிவ் ஆனதா? அப்படியெனில் இதை முயற்சிக்கலாம்.

 தேவையானவை
தயிர் - மூன்று டேபிள் ஸ்பூன்
 எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சிறிதளவு
தேவையான பொருட்களில் உள்ள மூன்றையும் ஒன்றாக கலக்கி முகத்தில் பூசுங்கள். அது நன்றாக காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

எண்ணெய் சருமம் :
என்ன சோப்,க்ரீம் பயன்படுத்தினாலும், முகத்தில் எண்ணெய் வழிவது நிற்கவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இதனை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மெட்டி பவுடர்,லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்.


70 சதவீதம் காய்ந்ததும் கழுவிவிடலாம். முழுவதும் காய வைக்க வேண்டாம் ஏனென்றால் அது உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் சேர்த்து உறிஞ்சிவிடும்.

 வறண்ட சருமம் :
 வறண்ட சருமம் உள்ளவர்கள் என்ன மேக்கப் போட்டாலும் அது நிக்காது, அத்துடன் சருமம் வறண்டு இருப்பதால் ஸ்கின் அலர்ஜி இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். இவர்கள் லெமன் ஜூஸ், தேன்,மற்றும் பாதாம் எண்ணெய் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post