பெண்களுக்கு பீரியட் காலத்தில் அடிக்கடி மலம் வெளியேறுவது சாதாரணமானதுதானா?

 மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சில வலிகளும், வேதனைகளும் உண்டாகும்.

ஆனால் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக தடவை மலம் கழிக்க நேரிடும்.

இது பொதுவானது தானா? இல்லை இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உங்களுக்கு மட்டும் இல்லை!
வழக்கமான நாட்களை விட மாதவிடாய் காலங்களில் அதிக தடவை மலம் கழிக்கும் பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை, அதிக பெண்களுக்கு உள்ளது. இந்த மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட செரிமான மண்டலம் மிக வேகமாக செயல்படுவது போன்று தோன்றும்.

ஹார்மோன் மாற்றம்
மாதவிடாய் காலத்தில் உங்களது உடல் புரோஸ்ட்டக்ளாண்டின் என்ற ஒரு வகை ஹார்மோனை வெளிப்படுத்தும். இந்த ஹார்மோன் உங்களது கர்ப்பப்பை உடன் தொடர்புடையது. மேலும் இந்த புரோஸ்ட்டக்ளாண்டின் என்ற ஹார்மோன் செரிமான மண்டலத்தை வேகமாகவும் இயங்க வைக்கிறது. இதனால் தான் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

மன அழுத்தம்
 சில சமயங்களில் மன அழுத்தம் கூட இந்த அதிக வேக செரிமானத்திற்கு காரணமாக அமையலாம். எனவே மாதவிடாய் காலத்திலும் அதற்கு முன்னரும் கூட மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


தடுக்க என்ன செய்யலாம்?
மாதவிடாய் காலத்தில் உண்டாகும் இந்த வயிற்றுப்போக்கில் இருந்து தப்பிக்க, நீங்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பைபர் அதிகமாக உள்ள உணவுடன் சிறிது கார்போஹைட்ரைட் உணவுகளையும் சேர்த்து உண்ணும் போது இந்த வயிற்றுப்போக்கில் இருந்து விடுதலை பெறலாம்.

தவிர்க்க வேண்டியவை!
மாதவிடாய் காலத்தில் சாக்லேட், பிரட், எண்ணெய் உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும். மேலும் வாயு உணவு பொருட்களையும் காபி குடிப்பதையும் மாதவிடாய் காலத்தில் தவிர்க்கவும்.

குறிப்பு :
 மாதவிடாய் காலத்தில் இல்லாமல், சாதாரண நாட்களில் உங்களது செரிமான மண்டலம் வேகமாக செயல்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானால் மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்..!

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post