உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா... ஆண்களே உஷார்!!!!

பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.

அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும்.

இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவது, மற்றும் Diet எடுத்துக்கொள்ளும் பொழுது சரியான உணவுகளை சாப்பிடாமல் வைட்டமின் "D" மற்றும் கால்சியம் குறைபாட்டால் இந்த பாதிப்பு உருவாகிறது.


இது இல்லாமல் சில பெண்களுக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இந்த பாதிப்பு வரும் என கூறப்படுகிறது.

மெல்லிய உடல் தோற்றம் உள்ள பெண்கள் சரிவர சாப்பிடாமல் நியூட்ரிஷன் குறைபாட்டாலும் வர வாய்ப்பு இருக்கு. சில நோய்களை அதோட அறிகுறி மூலமா நாம தெரிஞ்சிக்கலாம் ஆனா Osteoporosis பொறுத்தவரை எலும்பு தேய்ந்து நொறுங்கும் வரை நமக்கு எந்த அறிகுறியும் தென்படாது.

30 வயதை தாண்டிய பின்பு தீராத இடுப்பு வலி வந்தால் bone density test எடுக்கறது மூலமா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பா இந்த பாதிப்பு ஆசியா மக்களுக்கு மட்டும் இருப்பதா சில ஆராய்ச்சிகள் சொல்லப்படுது.

அதனால் ஆண்கள் தங்கள் மனைவிக்கு சின்னதா இடுப்பு வலி வந்தாலும் அத அலட்சியப்படுத்தாம உடனே அதுக்கான டெஸ்ட் எடுத்து உங்க மனைவியோட நலனை மேம்படுத்துறது நல்லது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post