எளிதில் கருவளையம் மறைய விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தனும் தெரியுமா..?

கருவளையம் சரியாக தூங்காமலிருக்கும்போது, இரவில் அதிக நேரம் படித்தாலோ, கவலைகளாலோ உண்டாகும்.

அவை உடனடியாக மறைந்துவிட்டால் மகிழ்ச்சிதான். ஆனால் அவ்வளவு எளிதில் கருவளையம் மறையாது என்பதுதான் பிரச்சனையே.

நீங்கள் உருளைக் கிழங்கு, வெள்ளரி என பயன்படுத்தியிருப்பீர்கள்.

எதுவுமே பயனளிக்கவில்லையென்றால் சோர்ந்து விடாதீர்கள். நிச்சயம் இந்த விளக்கெண்ணெய் ரெசிபி பயனளிக்கும்.

இந்த ரெசிப்பிகள் விரைவில் கருவளையத்தை போக்கச் செய்யும் என நிருபிக்கப் பட்டுள்ளது. எப்படி என பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் பால் :
தேவையானவை :
விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
விளக்கெண்ணெயில் பால் கலந்து நன்றாக அடித்து கலக்குங்கள். பின்னர் அதனை கண்களைச் சுற்றிலும் பூசி 1 மணி நேரம் கழித்து கழுவவும்.
 
  
விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் :
விளக்கெண்ணெய்- 4 துளிகள்
பாதாம் எண்ணெய் - 4 துளிகள்
இரண்டையும் நன்றாக கலந்து கண்களில் பூசுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் ஒரு வாரத்திலேயே மாற்றம் காணலாம்.  

 விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :
இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை கண்களில் த்டவி 1 மணி நேரம் கழித்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.விளக்கெண்ணெய் மற்றும் உருளைச் சாறு :
விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்
உருளைச் சாறு - 1 ஸ்பூன்
இந்த இரண்டையும் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். இது விரைவில் பயனைத் தரும். தொடர்ந்து பயன்படுத்தினால் அடர் கருவளையம் இருப்பவர்களுக்கு சீக்கிரம் குணமாகும்.  

 விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் :
 கற்றாழை ஜெல்லை எடுத்து மசித்துக் கொள்லுங்கள். அதனுடன் விளக்கென்ணெயை கலந்து நன்ராக அடித்து கலந்தால் வெண்ணெய் போல் வரும். அதனை கண்களைச் சுற்றிலும் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இதுவும் மிக விரைவில் பலன் தரும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post