பெண்களிடம் அதிகரித்து வரும் பெண்ணுறுப்பு மாற்று வடிவமைப்பு சிகிச்சை பற்றி தெரியுமா..?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எப்படி முகத்தை, முகத்தின் சில பாகத்தை நமக்கு பிடித்தது போல மாற்று கொள்கிறோமோ. அப்படி தான் லாபியாபிளாஸ்டி. இந்த வகை சிகிச்சை மூலமாக பெண்ணுறுப்பை அவரவர் விரும்பும் வகையில், வடிவில் மாற்றி அமைத்து கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பும், இதற்காக நம் நாட்டவர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதுமாய் இருந்தது.

ஆனால், தற்போதைய நவநாகரீக கலாச்சாரத்தில் இது மிகவும் சாதாரணம் ஆகிவிட்டது. மும்பையில் இந்த சிகிச்சைக்கென தனி மருத்துவமனை இருக்கிறது.பெண்ணுறுப்பு!
பெண்ணுறுப்பில் பல பாகங்கள் இருக்கின்றன. அதில் எந்த பாகம் மாற்றி அமைக்க வேண்டுமோ, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலமாக பெண்ணுறுப்பின் வெளிப்புற பாகம் அழகாக்க படுகிறது.

வயதானவர்கள்!
பொதுவாகவே வயதாக, வயதாக மனித உடல் பாகங்களும் வயதாகி போகும். இது பிறப்புறுப்புக்கும் பொருந்தும். முக்கியமாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகும், நடுவயதை எட்டும் போது பெண்ணுறுப்பின் இறுக்கம் குறைந்துவிடும். இதை சரி செய்வதற்கும். மீண்டும், பெண்ணுறுப்பை இறுக்கமாக செய்வதற்கும் கூட பலர் இந்த லாபியாபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்கின்றனர்.  

மீண்டும் கன்னித்தன்மை!
ஹைமன் (Hymen) எனும் சவ்வு தான் பெண்களின் கன்னித்தன்மையை குறிக்கிறது. இது தாம்பத்தியத்திற்கு பிறகு கிழிந்துவிடும். சிலர் "வெஜினா ரிவெர்ஜினைசேஷன்" என்ற சிகிச்சை மூலம் ஹைமன் உருவாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதற்காக "hymenoplasty" எனும் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.
 
 
தாம்பத்தியம்!
 இன்னும் சிலர் தாம்பத்திய உறவை சிறப்பித்து கொள்ள இது போன்ற பெண்ணுறுப்பு மாற்று வடிவமைப்பு சிகிச்சை மேற்கொள்ள வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அங்கு ஏற்பட்டுள்ளது சுருக்கங்களை போக்கவும், இறுக்கத்தை ஏற்படுத்தவும் தான் பெண்கள் பலர் விரும்புகின்றனர்.

மருத்துவர்கள்!
இந்த லாபியாபிளாஸ்டி எனும் சிகிச்சை செய்ய ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், மகப்பேறு / பெண் நல மருத்துவர் உடன் இருப்பார்கள். மேலும், இதில் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத என இரண்டு வகை கலந்திருக்கின்றன.

18 வயது!
இந்த சிகிச்சையை 18 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. "gynaec-cosmetic" என்றழைக்கப்படும் சிகிச்சை மேற்கத்திய நாடுகளில் மிக சாதரணமாக செய்யப்படுகிறது.

மருத்துவர்கள்!
இப்போதெல்லாம் வெளிப்புறம் என்று மட்டுமில்லாமல், உட்புறமாகவும் பெண்கள் அழகாக இருக்க விரும்புகிறார்கள். இதன் காரணத்தால் தான் இது போன்ற சிகிச்சைகள் இப்போது பெருகி வருகிறது என கூறுகின்றனர்.Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post