14- இறாத்தல் எடையில் பிறந்த குழந்தையால் விசித்திரம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் 14-இறாத்தல்கள் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் முன்னராக பிறந்த இந்த குழந்தை ஆச்சரியங்கள் நிறைந்து பிறந்துள்ளான். குறிப்பிட்ட திகதிக்கு முன்னர்பிறந்தது மற்றும் கூடிய எடையுடன் பிறந்தது.

கொலின் பேகோயின் என்பவருக்கு ஷான் ரைசன் வில்லியம்ஸ் பேகொயின் என்ற இக்குழந்தை கிரான்புறூக் கிழக்கு கூட்னி பிராந்திய மருத்துவ மனையில் கடந்த திங்கள்கிழமை பிறந்தான்.


அறுவைசிகிச்சை பிரசவம் மூலம் பிறந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குறிப்பிட்ட வைத்தியசாலையில் பிறந்து முதல் எடை கூடிய குழந்தையும் இவன் ஆவான்.

வழக்கமாக குழந்தைகள் ஏழரை அல்லது எட்டு இறாத்தல் எடையுடன் பிறப்பது வழக்கம். ஆனால் இவன் 2,000கிராம்களுடன் பிறந்தான் என வைத்தியசாலை தாதி ஒருவர் தெரிவித்தார். வழக்கத்திற்கும் மாறான பிரசவம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post