இளம் தம்பதிக்கு லண்டனில் நேர்ந்த பரிதாபம்...!

மேற்கு லண்டனில் உள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இளம் தம்பதி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் Gloria Trevisan மற்றும் Marco Gottardi என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இத்தாலி நாட்டை சேர்ந்த கட்டட கலை நிபுணர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தம்பதி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தொழிலுக்காக லண்டனுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

23வது மாடியில் குறித்த இளம் தம்பதி சிக்கியிருந்த நிலையில், அந்த பெண் தனது தாய்க்கு இறுதியாக அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

தாம் தீ விபத்தில் சிக்கியிருப்பதாகவும், காப்பாற்றுவதற்காக குழுவினர் வருவார்கள் என காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்கள் காப்பாற்றப்படவில்லை. உயிரிழப்பதற்கு முன்னர் மீண்டும் தனது தாய்க்கு அழைப்பேற்படுத்தி இதுவரை செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி என குறிப்பிட்டு விட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post