காதலனை தற்கொலைக்கு தூண்டிய அன்பு காதலியால் அதிர்ச்சி!!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரை சேர்ந்த மீச்செல் கார்டர்(20) என்ற இளம்பெண் கோன்ராட் ரோய் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் காதலனுக்கு மீச்செல் பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

அதில், ’நீ நிச்சயமாக தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும். இது தான் நீ எனக்கு செய்யும் கடைசி உதவி’ என பலமுறைகுறிபிட்டு உள்ளார். ஜூலை 12-ம் தேதி காரில் வெளியே சென்ற காதலனுக்கு அதே போல் குறுஞ்செய்திகளை மீச்செல் அனுப்பியுள்ளார்.


காதலியின் இந்த செயலால் வெறுப்படைந்த  காதலன் காரில் ஒருவித வாயுவை செலுத்தி கதவுகளை மூடிக்கொண்டு மூச்சடைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மறுநாள் காலையில் காதலனின் உடல் கிடைக்கப்பெற்று விசாரணை தொடங்கியபோது அவரது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் மீச்செலை கைது செய்ய வைத்துள்ளது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது மீச்செல் மீது தற்கொலைக்கு தூண்டியதற்கான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி பேசுகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறுதலான வழிகாட்டுதல்களால் ஒருவரின் உயிர் பறிப்போக இளம்பெண் காரணமாக இருக்கிறார். இவருக்கு நிச்சயமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மீச்செல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி அவருக்கு இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post