இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடமைகள் பல லட்சங்களுக்கு ஏலம்!!

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடமைகள் பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் உடமைகள் சிலவற்றை சமீபத்தில் இங்கிலாந்தின் ‘டொமினிக் வின்டர்ஸ் நிறுவனம்’ ஏலம் விடுத்தது. இதில் இளவரசி டயானாவின் ‘ஷூ’க்கள், கடிதம், தத்துவக் குறிப்புகள் ஆகியவை ஏலம் விடப்பட்டன.

உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி. இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.


இத்தகையப் பெருமைகளைக் கொண்ட டயானா, திருமணத்துக்கு முன்னர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர். பத்தொன்பது வயதில் பள்ளி ஆசிரியையாக இருந்தபோது அவர் அணிந்திருந்த ‘ஷூ’க்கள் ஏலம் விடப்பட்டன. இந்த வெள்ளை நிறத்திலான ‘ஷூ’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டயானாவை பிரிந்திருந்தபோது இளவரசர் சார்லஸ் எழுதியிருந்த கடிதங்களும், டயானாவின் அரண்மனைக் குறிப்பேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவங்கள் குறித்த குறிப்புகளும் லட்சங்களில் ஏலம் எடுக்கப்பட்டதாக இங்கிலாந்தின் ‘டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post