நதியில் வீழ்ந்து காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!!


கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமப்போன இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கு 3 நாட்களாக மீட்ப்புப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை. எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post