உயிரிழந்த குழந்தையின் தலையில் கடைசியாக முத்தமிட்டு வழியனுப்பிய தாய்!!!

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அந்நோயால் உயிரிழந்த தனது குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை தாய் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Tunbridge Wells நகரத்தை சேர்ந்தவர் Dan (38), இவர் மனைவி Ali Farbrace (35).

இவர்களின் மகன் Daniel, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 29ல் Daniel குறைபிரசவத்தில் பிறந்தான்.

சில மாதங்கள் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்த Daniel, மூன்று மாதங்களுக்கு பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

Danம், Farbraceம் தங்கள் குழந்தையுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நேரத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரலில் Daniel உடல் தோலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அவனது பெற்றோர் உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டு சென்று காட்ட leukemia ரக புற்றுநோய் திசுக்கள் Danielன் உடலில் உண்டாகியிருப்பது தெரியவந்தது.

ஆனாலும், மருத்துவர்கள் 72 சதவீதம் குழந்தையை காப்பாற்றி விட முடியும் என கூறியுள்ளனர்.

பிறகு, Danielக்கு நான்கு முறை chemotherapy சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி நோய் முற்றியதன் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

Daniel சடலமாக மெத்தையில் கிடந்த நிலையில், அவன் தாய் Farbrace மகனின் தலையில் கடைசியாக முத்தமிட்டார்.


இது சம்மந்தமான புகைப்படத்தை தற்போது Farbrace, குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் குறித்து Farbrace கூறுகையில், இந்த புகைப்படத்தில் Daniel போர்வீரர்கள் ஓய்வெடுப்பதை போல படுத்துள்ளான்.

அவன் ஒரு போராளி, நோயை எதிர்த்து கடுமையாக போராடியவன் என கூறியுள்ளார்.

Danielஐ மகிழ்ச்சியான, அழகான குழந்தையாகவே எங்கள் நினைவில் வைத்து கொள்ள விரும்புகிறோம் எனவும் Farbrace கூறியுள்ளார்.




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post