சீனப்போராளியின் உடல் தகனம்: மனைவி வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை!!!

சீனாவை சேர்ந்த மனித உரிமை போராளியும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான லியு ஜியாபோ (61 வயது), கல்லீரல் புற்றுநோயால் நேற்று முன்தினம் ஷென்யாங் நகரில் மரணம் அடைந்தார்.

அவர் சீனாவில் ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த ஒரே காரணத்தால், அவர் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

அதைத் தொடர்ந்து அவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரைப் புற்றுநோய் தாக்கியபோதும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற சீன அரசு அனுமதி அளிக்கவில்லை.


நோபல் பரிசு அறிவிக்கப்பட்டும், அதைப் பெறக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு ஆஸ்லோவில் நடந்த நோபல் பரிசு அளிப்பு நிகழ்ச்சியின்போது, அவருக்கான நாற்காலியை மட்டுமே வைத்து விழா நடத்தினார்கள்.

லியு ஜியாபோவின் மரணம் சர்வதேச சமூகத்தை உலுக்கி உள்ளது. சீனாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, 2010-ம் ஆண்டு முதல் லியு ஜியாபோவின் மனைவி லியு ஜியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை சீன அரசு விடுதலை செய்ய  வேண்டும் என்று பல தரப்பினரும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.  இந்த நிலையில், லியு ஜியோபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள சீனா, மனைவியையும் வீட்டுக்காவலில் இருந்து விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post