வைரலாகும் இளம் பெண்ணின் புகைப்படம்... இப்படியும் ஒரு மேக்கப்பா?

31 வயதுள்ள மிமி எனும் இளம்பெண் பாதியாக உடைந்த முகம், உதட்டின் மீது ஏறிடும் பூச்சி, இடம் மாறிய கண்கள் இது போன்ற வித்யாசமான மேக்கப்களை போட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் மிமியின் மேக்கப் புகைப்படத்தில் எந்த விதமான போட்டோஷாப் வேலைபாடுகளும் இல்லாமல், முழுவதும் மேக்கப் தந்திரத்தின் மூலம் செய்யப்பட்டதாம்.

இது குறித்து மிமி கூறியதாவது, என் முகம் எனக்கு கேன்வாஸ் போல விதவிதமாக முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

ஐந்து மணி நேரம் முகத்தை வெவ்வேறு விதமாக மாற்றிக் காட்ட, மேக்கப்பிற்கு ஐந்து மணி நேரம் வரை செலவிடுவேன். இந்த மேக்கப்பிற்கு பெரும்பாலும் ஐலைனரை அதிகமாக பயன்படுத்துவேன்.


முகம் மட்டுமல்ல கைகளிலும் வித்யாசமான மீன், பாம்பு, பறவை போன்ற உருவங்களை மேக்கப் மூலமாக உருவாக்குவேன்.

இதேபோல் ஒவ்வொரு முறையும் நான் போடும் வித்தியாசமான மேக்கப்பின் புகைப்படத்தையும், அது செய்ய பயன்படுத்திய பொருட்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன்.

ஏனெனில் இப்புகைப்படத்தை பார்ப்பவர்களின் சிந்தனைகள், வழக்கத்திற்கு மாறாக இப்படியும் ஓர் வழி இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவர்களுக்கு தோன்றும்.

ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த நான் என்னுடைய அம்மாவின் துணையுடன் மேக்கப் ஆர்டிஸ்டாக நிபுணத்துவம் பெற்றேன்.

சவால்கள் மற்றும் புதுமையை என்றும் விரும்பும் எனக்கு இந்த துறை மிகவும் ஏற்றது என்று மிமி கூறியுள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post