இளவரசி டயானாவை விபச்சாரி என பேசிய தாயார்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

இளவரசர் ஹரி பிறந்த அன்று தன்னுடைய வார்த்தைகளால் டயானாவை கணவர் சார்லஸ் அழ வைத்தார் என முன்னாள் உதவியாளர் கூறியுள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் டயானா குறித்து யாருக்கும் தெரியாத விடயங்களை அவரின் முன்னாள் தலைமை உதவியாளர் Paul Burrell கூறியுள்ளார்.

Paul கூறுகையில், இளவரசர் ஹரி பிறந்த அன்று இரவு சார்லஸ் டயானாவிடம், என் கடமை இப்போது முடிந்து விட்டது என ஹரி பிறந்ததை குறிக்கும் வகையில் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டயானா சார்லஸுடனான தனது மெல்லிய மகிழ்ச்சியும் முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணி இரவு முழுவதும் அழுதுள்ளார் என Paul கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது காதலி Camilla Parker உடனான தொடர்பை மீண்டும் புதுப்பிக்க சார்லஸ் நினைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.


மேலும், கணவரை டயானா பிரிந்த பின்னர் Dodi Fayed என்பவரை அவர் காதலித்தார்.

இந்த விடயம் டயானாவின் தாய் Frances-க்கு கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து மகளை விபச்சாரி என போனில் பலமுறை அவர் கூறினார்.

இனி இப்படி சொன்னால் உன்னுடன் நான் பேசவே மாட்டேன் என டயானா தாயை நோக்கி கூறியதாகவும் Paul தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post