ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்கள்.. எல்லாம் கிளீன் போல்டு - 13 வயது சிறுவன் அசத்தல்!!

இங்கிலாந்து நாட்டின் வட-கிழக்கு பகுதியில் பிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. டர்ஹம் நகருக்கு அருகில் உள்ள லாங்கலே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் லுகே ரோபின்சன் என்ற 13 வயது சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பது தான் இதில் சிறப்பு.


இதனைவிட லுகே தந்தை ஸ்டீபன் தான் இந்தப் போட்டியின் நடுவர். தனது மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை கண் கூடாத பார்த்து ரசித்தார்.

பிலடில்பியா கிளப் போட்டி வரலாற்றில் 149 ஆண்டுகால சாதனையாக இது உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 


Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post