கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி!!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில்  அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில்  23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 


 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post