தென்கொரியாவில் தடுத்து நிறுத்தப்பட்ட 3 இளம் பெண்கள் - வைரலான புகைப்படம்!!!

சீனத்து இளம் பெண்கள் மூன்று பேர் கடவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்தை விட அவர்களது முகங்கள் வேறுபட்டிருப்பதாக கூறி தென் கொரிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இளம் பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த இளம் பெண்கள் 3 பேர் ஒருவார கால விடுமுறையை கொண்டாடும் வகையில் தென் கொரியா சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் தங்கள் முகத்திற்கு அழகூட்டும் வகையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீனத்து பெண்களின் அழகை மெருகூட்டும் முக்கிய தலமாக தென் கொரியா விளங்கி வருகிறது.


இந்த நிலையில் குறித்த 3 பெண்களும் தங்களது விசா காலம் முடிவுக்கு வரவிருப்பதை அடுத்து சிகிச்சையை முடித்துக் கொண்டு வீங்கிய முகத்துடன், கட்டுகளுடன் விமான நிலையம் வந்துள்ளனர்.

இதில் குறித்த 3 இளம் பெண்களின் அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் இருந்தும், கடவுச்சீட்டில் இருக்கும் முகத்தை விடவும், நேரில் அவர்கள் முகம் வித்தியாசமக இருந்ததை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவர்களை பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்துள்ளனர்.

தாங்கள்தான் கடவுச்சீட்டில் இருக்கும் பெண்கள் என சாதிக்கும் வகையில் அவர்களிடம் எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் மூவரையும் தென் கொரிய விமான நிலைய அதிகாரிகள் சீனா செல்ல அனுமதித்தார்களா என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post