அமெரிக்காவின் முதல் பெண்மணி நான்தான் - டிரம்பின் முதல் மனைவி போர்க்கொடி!!!!

அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு முதல் பெண்மணி என்ற அந்தஸ்து கிடைக்கும். தற்போது அங்கு அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகிக்கிறார். அவருக்கு 3 மனைவிகள். அவர்களில் ஒருவரை விவாகரத்து செய்து விட்டார்.

அவருடன் 3-வது மனைவி மெலானியா வாழ்ந்து வருகிறார். அவருக்கு டிரம்புக்கு பிறந்த ஒரு மகன் இருக்கிறான். எனவே இவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு டிரம்பின் முதல் மனைவி இவானா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சமீபத்தில் இவர் தான் எழுதிய ‘ரெய்சிங் டிரம்ப்’ (டிரம்பின் எழுச்சி) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பொதுவாக நான்தான் டொனால்டு டிரம்பின் முதல் மனைவி. எனவே நான்தானே அமெரிக்காவின் முதல் பெண்மணி. அது சரிதானே” என்றார்.

மேலும் டிரம்ப் பற்றி கூறும்போது, “நான் என் முன்னாள் கணவர் டிரம்புடன் 2 வாரங்களுக்கு ஒருமுறை பேசுவேன். வெள்ளை மாளிகையின் நேரடி டெலிபோன் நம்பர் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த நம்பரில் நான் டிரம்புடன் டெலிபோனில் பேச மாட்டேன். ஏனெனில் அங்கு மெலானியா இருக்கிறார். அவர் மீது எனக்கு பொறாமை எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.


இதற்கிடையே இவானாவின் பேட்டிக்கு மெலானியா டிரம்ப் தனது செய்தி தொடர்பாளர் ஸ்டபானி கிரிகாம் மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில் “வெள்ளை மாளிகையில் மெலானியா தனது கணவர் அதிபர் டிரம்ப் மற்றும் மகன் பாரானுடன் தங்கியுள்ளார். அவர் வாஷிங்டன் நகரை நேசிக்கிறார். அமெரிக்காவின் முதல் பெண் அந்தஸ்துக்கு கவுரவம் சேர்க்க நினைக்கிறார். அந்த அந்தஸ்துக்கு ஏற்ப குழந்தைகளுக்கு உதவ பாடுபடுகிறார். புத்தகங்களை விற்பதற்காக அல்ல” என கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்பை இவானா கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு டொனால்டு ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக் டிரம்ப் என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

2-வது மனைவி மர்லா மாப்பிள்சை காதலிப்பது தெரிந்ததும் 1990-ம் ஆண்டில் டிரம்பை இவானா விவாகரத்து செய்து விட்டார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post