பெண்ணாக மாறியது ஒரு தவறா..? - கதறும் மாலுமி!!!

ஆணாக இருந்து தற்போது பெண்ணாக மாறியதால் கப்பல் மாலுமி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி. 25 வயதான இவர், கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார்.

கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது. பணி நேரம் போக, மற்ற நேரங்களில் பெண்கள் போல உடையணிந்து அலங்காரம் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனால் கப்பலில் பணி செய்யும் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட, மணீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மணீஷ் விடுமுறைக்காக மும்பை சென்ற போது அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மணிஷை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


பெண்ணாக மாறிய மணீஷ் குமார் கிரி கூறுகையில், தான் விருப்பபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், பெண்ணாக மாறியது தவறா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நான் திருடான? பயங்கரவாதியா அப்படி என்ன நான் குற்றம் செய்தேன். 7 வருடங்களாக நாட்டுக்காக பாடுபட்டேன். என்னை பணி நீக்கியதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று மணீஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post