ஹோட்டலில் கணவருடன் சேர்ந்து தங்கிய மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!!!

கணவருடன் தான் தங்கிய ஹொட்டலின் வசதிகள் குறித்து மனைவி எதிர்மறையான மதிப்பீடு வழங்கிய நிலையில், குறித்த ஹொட்டலின் உரிமையாளர் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Emily Chance. இவர் தனது கணவர் Michael-யுடனான இரண்டாம் வருட திருமண நாளை கொண்டாட Lancashire கவுண்டியில் உள்ள Nelcon ஹொட்டலில் கடந்த மாதம் சென்று தங்கியுள்ளார்.

இரண்டு இரவுகள் தங்குவதற்கு தம்பதி £38 பணம் வாடகை செலுத்தியுள்ளனர். ஹொட்டலிருந்து Emily கிளம்பும் போது தங்கிய இடம் குறித்து அதற்கான வலைதளத்தில் மதிப்பீடு வழங்க ஹொட்டல் ஊழியர்கள் Emily-விடம் கூறினார்கள்.

இதையடுத்து ஹொட்டல் மிக மோசமாக மற்றும் அசுத்தமாக இருந்ததாகவும், தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் எதிர்மறையான மதிப்பீட்டை Emily வழங்கியுள்ளார்.

அதற்கு அதே வளைதளத்தில் Nelcon ஹொட்டல் நிர்வாகம் பதிலளித்தது. அதில், நீங்கள் செலுத்திய வாடகைக்கு என்ன வசதி வேண்டும் என எதிர்பார்த்தீர்கள்? நீங்கள் 4 ஸ்டார் ஹொட்டலை எதிர்பார்த்தீர்கள் என நினைக்கிறேன், ஆனால் இது சாதாரண ஹொட்டல் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், Emily-ன் செல்போனுக்கு Nelcon ஹொட்டல் உரிமையாளர் Evans மெசேஜ் அனுப்பியிருந்தார்.

அதில், நீங்கள் எல்லாவற்றையும் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளீர்கள். இதை மாற்ற நீங்கள் டயட்டில் இருக்க வேண்டும் என Emily-ன் பருமனான உடலை விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், Evans கூறுகையில் எங்கள் ஹொட்டலை பற்றி மதிப்பீடு செய்பவர்களால் எங்களுக்கு பிரச்சனையில்லை.


ஆனால், Emily கூறியது எல்லாமே பொய் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து Emily கூறுகையில், ஹொட்டல் குறித்த என்னுடைய மதிப்பீட்டுக்கு என் தனிப்பட்ட உடலமைப்பு குறித்து உரிமையாளர் விமர்சித்தது தவறாகும்.

Nelcon ஹொட்டல் மிகவும் அசுத்தமாகவும், கெட்ட வாடையோடும் இருந்தது.

அறையிலிருந்த படுக்கை விரிப்புகள் கூட வேறு யாரோ பயன்படுத்திய நிலையில் அதை அப்படியே எங்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

நான் கொடுத்த பணத்துக்கு எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? மேலும், ஹொட்டலில் குடிகாரர்களும், ரவுடிகளும் இருந்ததால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒரு நாய் தங்குவதற்கு கூட தகுயில்லாத ஹொட்டல் அது என கூறியுள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post