வயிற்றுக்கு வெளியே குடலுடன் பிறந்த குழந்தை!!!

குடல் வெளிப்புறமாகக் கொண்டு பிறந்த குழந்தைக்கு மூன்று மணி நேர சிகிச்சையின் பின் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குடல் மீண்டும் உள்ளே பொருத்தப்பட்டது.

வேல்ஸ் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏவா ரோஸ் நைட்டிங்கேல் என்ற குழந்தையின் வயிற்றுச் சுவர்கள் போதுமான இடம் கொடுக்காமையால் குழந்தையின் குடல், பிறக்கும்போதே உடலுக்கு வெளிப்புறம் தள்ளப்பட்டிருந்தது.

இதனால் அந்தக் குழந்தைக்கு உணவூட்டி பராமரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.


இதைனையடுத்து அந்தக் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மூன்று மணி நேர சிகிச்சையின் பின் வெற்றிகரமாகக் குடல் அந்தக் குழந்தையின் வயிற்றினுள் வைத்துப் பொருத்தப்பட்டது.

மூன்று வார காலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த இந்தக் குழந்தை தற்போது பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post