இரட்டை சகோதரிகளை பிரிக்க சவூதி மன்னரின் உதவியால் நெகிழ்ச்சியில் தந்தை...!

பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளை பிரிப்பதற்கான சத்திரசிகிச்சைகள் சவூதி மன்னரின் உதவியின் கீழ் நடைபெறவுள்ளன.

எகிப்தை சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகள்களான மென்னா மற்றும் மே என்போர் பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாவர். 

இவர்களது தலைப்பகுதி ஒன்றாக ஒட்டிய நிலையில் உள்ளது. அதைப் பிரிப்பதற்காக அதிகளவான பணம் தேவைப்படுகின்றது. 

குறித்த சிறுமிகள் பற்றி கேள்வியுற்ற சவூதி மன்னர் சல்மான் அல் சவூட், உடனடியாக அவர்களை சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் அப்துல் அஸிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பணித்துள்ளார்.மேலும் குறித்த சிறுமிகளின் சிகிச்சைக்கு தேவையான செலவீனங்கள் அனைத்தையும்  சவூதி மன்னரே ஏற்பதாக மன்னரின் அறக்கட்டளை மையம் தெரிவித்துள்ளது. 

குறித்த சிறுமிகளை குணப்படுத்துவதற்கு பணம் இல்லாது தவித்து வந்த நிலையில் சவூதி மன்னர் உதவியுள்ளமை தனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தருவதாக  சிறுமிகளின் தந்தை மன்னருக்கு தனது நன்றிகளை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post