இந்திய உணவகத்தில் உணவுப் பொதி வாங்கி உண்ட லண்டன் சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்...!

லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது.

இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார்.இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்த ஹோட்டலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தகவல் எதுவும் அறியத் தரப்படவில்லை.

உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லங்கஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post